logo

இலங்கையில் அறிமுகமாகும் London Trading Index: புதிய தலைமுறை முதலீட்டாளர்களுக்கு உலகளாவிய நிதிக்கதவுகளைத் திறக்கிறது

கொழும்பு, இலங்கை — இலங்கையில் வர்த்தகத்துறையின் எதிர்காலத்தை மீள வடிவமைப்பதை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, London Trading Index (LTI) உத்தியோகபூர்வமாக இந்நாட்டில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதோடு உலகத்தரத்திலான வர்த்தகக் கருவிகள், கல்வி வளங்கள் மற்றும் நாட்டினுடைய வளர்ந்து வரும் முதலீட்டாளர் சமூகத்திற்கு ஏற்ற வகையில் உலகளாவிய சந்தைக்கான அணுகல் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளது.

இலங்கையின் நிதிச் சந்தை தொடர்ந்தும் முதிர்ச்சியடைந்து வருவதால், மேம்பட்டதும் அணுகக்கூடியதுமான வர்த்தகத் தளங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. நம்பகத்தன்மை மற்றும் புத்துருவாக்கம் மூலம் உலகளாவிய நன்மதிப்பைப் பெற்றுள்ள உள்ளுணர்வும் பலமும் கொண்ட தளங்களை வழங்குவதனூடாக LTI மிகச்சரியான தருணத்தில் அடியெடுத்து வைக்கிறது, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்வல்லுநர்கள் முதற்கொண்டு புதிய பாதைகளைத் தேடும் அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் வரை உலகளாவிய நிதிச் சந்தைகளுக்கான அணுகலைப் பெறுவதை LTI தனது இலக்காகக் கொண்டுள்ளது.

இலங்கை வர்த்தகர்களை உலகளாவிய அணுகலுடன் வலுவூட்டல்

LTI ஆனது நிதி வர்த்தகத்தை உள்ளடக்கலுடனான, பாதுகாப்பான மற்றும் கல்வி சார்ந்ததாக மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது. MetaTrader 4 மற்றும் MetaTrader 5 போன்ற கைத்தொழில்துறையின் முன்னணி இயங்குதளங்களுடனான தங்குதடையற்ற ஒருங்கிணைப்புடன், LTI ஆனது விரைவான நடைமுறைப்படுத்தல், தனிப்பயனாக்கக்கூடிய வரைபுக்கருவிகள் மற்றும் பயனாளர்கள் தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் நிகழ்நேர பகுப்பாய்வுகள் என்பனவற்றை வழங்குகிறது.

LTIஇனை விரும்பத்தக்க உலகளாவிய வர்த்தக தளமாக மாற்றுவது எது?

London Trading Index ஒரு பலமான செயலாற்றுகை குறிகாட்டிகள் மற்றும் வாடிக்கையாளர் மைய சேவைகள் மூலம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்தளமாக தனது இடத்தைப் பெற்றுள்ளது:

  • உலகளாவிய அணுகல்: அந்நிய செலாவணி, சுட்டிகள், பண்டங்கள் மற்றும் CFDகள் உட்பட 250 இற்கும் மேற்பட்ட நிதிக்கருவிகளுக்கான அணுகல்.

  • பலமான செயலாற்றுகை அளவீடுகள்: ஒரு வினாடிக்கு 99.9% கட்டளைகள் செயற்படுத்தல் விகிதம், மிக விரைவான சேவையகங்கள் மற்றும் தொகுதிக்கான வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேர அணுகல்.

  • உச்சபட்ச பாதுகாப்பு: சர்வதேச இணக்கப்பாடு உடைய தரநிர்ணயங்களைப் பின்பற்றுதல், அலகு பிரிக்கப்பட்ட வாடிக்கையாளர் நிதிகள் மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கான உயர்மட்ட குறியீட்டாக்கம்.

  • வாடிக்கையாளர் திருப்தி: வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் உயர் விகிதங்களைப் பேணுதல் மற்றும் உலகளாவிய வர்த்தகர்களிடமிருந்து தொடர்ந்து நேர்ப்பாங்கான பின்னூட்டங்கள் பெறுதல்.

  • மேம்பட்ட வர்த்தக உட்கட்டமைப்பு: செயற்கை நுண்ணறிவால் நெறிப்படுத்தப்படும் இடர் முகாமைத்துவக் கருவிகள் மற்றும் படிமுறைத் தீர்வுடனான வர்த்தக அம்சங்கள்.

இலங்கையின் சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு சந்தையைப் புரிந்துகொள்வதே LTI இன் விரிவாக்க மூலோபாயத்தின் அடிப்படையாக அமைகிறது. இலங்கை வியாபாரிகள் பின்வரும் பயன்களைப் பெறுவர்:

  • உள்ளகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் உதவிச்சேவை: இலங்கையின் நிதி நிலைமை மற்றும் நெறிமுறைச் சூழலை நன்கறிந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஒரு குழு.

  • கல்விக்கு முன்னுரிமை வழங்கும் அணுகுமுறை: இணையக் கருத்தரங்குகள், மின்நூல்கள், சந்தை இற்றைப்படுத்தல்கள் மற்றும் அனுபவமிக்க வர்த்தக நிபுணர்கள் தலைமையிலான மூலோபாய அமர்வுகள் உள்ளிட்ட கற்றல் வளங்களின் தொகுப்புக்கான இலவச அணுகல்.

  • நெகிழ்வுத்தன்மையுள்ள கட்டுப்படியாகக்கூடிய வர்த்தகம்: மிகக்குறைந்த குறைந்தபட்ச வைப்புத்தொகை, போட்டித்தன்மையுள்ள பரம்பல்கள் மற்றும் நம்பிக்கையைப் பெறுவதற்கு நேரடியான வர்த்தகத்திற்கு முன்னதாக மாதிரிக் கணக்குகளுடன் தொடங்குவதற்கான தெரிவு.

  • பன்மொழி இடைமுகம்: உள்ளடங்கலுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட மொழித் தெரிவுகளுடனான பயன்பாட்டுக்கு எளிதான தளம்.

நிதிசார் வலுவூட்டலை நோக்கிய ஒரு படி

“இலங்கை வர்த்தகர்கள் உலகளாவிய அரங்கில் வெற்றிபெறுவதற்குத் தேவையான கருவிகள், உதவி மற்றும் நம்பிக்கையுடன் அவர்களைச் வலுவூட்டுவதே எமது நோக்கம்” என்று லண்டன் வர்த்தக சுட்டெண்ணின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “வர்த்தகமானது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமானதாக அல்லாது, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். LTI மூலம், நிதிச் சுயாதீனத்தை நோக்கி யார் வேண்டுமானாலும் முதல் படியை எடுத்து வைக்க முடியும்.”

இலங்கைக்கான விசேட அறிமுகப்படுத்தல் சலுகை

தனது வருகையைக் குறிக்கும் வகையில், முதலில் இணையும் இலங்கைப் பயனாளர்களுக்கு LTI பிரத்தியேக நன்மைகளை வழங்குகிறது:

  • குறிப்பிட்ட காலத்துக்கு ப்ரீமியம் கருவிகளுக்கான இலவச அணுகல்

  • தனிப்பயனாக்கப்பட்ட ஒன்போர்டிங் உதவி மற்றும் மூலோபாய ஆலோசனைகள்

  • வர்த்தகர்கள் தமது பயணத்தை ஆரம்பிக்க உதவுமுகமாக முதல் வைப்புத்தொகைக்கு ஒரு வரவேற்பு போனஸ் தொகை

இன்றே தொடங்குங்கள்

நீங்கள் முதன்முறையாக வர்த்தகம் தொடர்பில் ஆர்வம் செலுத்துபவரோ, அல்லது உங்கள் முதலீட்டுத்தொகுப்பை வளர்ப்பதற்கான சிறந்த தளத்தைத் தேடுபவரோ, யாராக இருப்பினும் பாதுகாப்பான, தங்குதடையற்ற மற்றும் பலனளிக்கக்கூடிய வர்த்தக அனுபவத்திற்கான உங்களது நுழைவாயில் London Trading Index ஆகும்.

உங்களது கணக்கைப் பதிவு செய்து, உலகளாவிய நிதிச்சந்தைகளில் உங்களது பயணத்தைத் தொடங்க, இன்றே LTI Sri Lanka பக்கத்தைப் பார்வையிடுங்கள்.


London Trading Index என்பது உலகம் முழுவதும் உள்ள சில்லறை வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கக்கூடிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வர்த்தகத் தளமாகும், புத்துருவாக்கம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் வளர்ந்துவரும் சந்தைகள் மற்றும் முதிர்ச்சியடைந்த சந்தைகளில் வர்த்தகர்களுக்கு வலுவூட்டும் வகையில் LTI அதன் தடத்தினை விரிவுபடுத்துகிறது.

Create a free website with Framer, the website builder loved by startups, designers and agencies.